weather

img

தமிழகம், கேரளாவுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை....

புதுதில்லி:
அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமையன்று காலை புயலாக உருவானது. அடுத்த 3 மணி நேரத்தில்தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னைவானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குஜராத் கடற்கரையில் போர்பந்தர் - நலியா இடையே வரும் செவ்வாய்க்கிழமைபுயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தாக்டே புயல் காரணமாக கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, குஜராத், மராட்டியம் மாநிலங்களுக்கு 50-க்கும்மேற்பட்ட தேசிய பேரிடர் குழு விரைந்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை மிக மிக கனமழை பெய்யும்என்றும் இதனால், வெள்ள பாதிப்பு மற்றும்நிலச்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தமிழகம், கேரளா மாநிலங்களுக்கு மத்திய நீர்வளத்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள் ளது. கன்னியாகுமரி, கோதையாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

;